கேள்வி : அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் அகீதாவிற்கு முரணான ‘அஷ்அரிய்யா’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றக் கூடிய இமாம்களின் பின்னால் நின்று தொழலாமா?
ஃபத்வா: யாரெல்லாம் இஸ்லாமிய வட்டத்திற்குள் இருக்கிறார்கள் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அவர்களின் பின்னால் நின்று தொழுவது கூடும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கூற்றாகும். இதுவே சரியான முடிவாகும்.
பாவம் செய்யக் கூடியவர்களின் பின்னால் நின்று தொழ முடியாது என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளர்களின் பின்னால் தொழுவதற்கு அனுமதியளித்துள்ளார்கள். – பெரும்பாலான ஆட்சியாளர்கள் பாவிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ஓர் அநியாயக்காரராக இருந்தும் கூட இப்னு உமர், அனஸ் (ரலி – ஹும்) போன்ற நபித்தோழர்கள் அவரின் பின்னால் நின்று தொழுதிருக்கிறார்கள்.
ஆக, இஸ்லாத்தை விட்டு வெளியேற்றாத பித்அத்துக்களையோ அல்லது பெரும் பாவங்களையோ செய்யக் கூடியவர்களின் பின்னால் நின்று தொழுவது கூடும் என்பதே சரியான முடிவாகும். அதேவேளை இமாம்களை நியமிக்கும் போது அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். – அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்