இஸ்லாம்தளம்

அன்பளிப்பு

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத்  தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு  நான் இல்லை என்றேன்.  அப்பொழுது அவர்கள் நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான் ப்னுஹிமாஸ் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்,திர்மிதீ)

நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர்  ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோ, அன்ஸாரிகளிடமிருந்தோ, ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْநூல் அபூதாவூத்)

நபி صلى الله عليه وسلم அவர்களின் திண்ணைப் பள்ளி மாணக்கர்களான ஸுஃப்பாவாசிகளில் சிலருக்கு நான் எழுத்துக் கலையையும் குர்ஆனையும் கற்றுக் கொடுத்தேன். எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அப்பொழுது நான், என்னிடம் பொருள் இல்லாததால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்துவேன் என்று கூறி பின்னர், அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் ஒருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்து வந்தேன். அவர் என்னிடம் பொருள் இல்லாததால் நான் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்வேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள்,  நரக  நெருப்பு வளையம் உம்முடைய கழுத்தில் போடப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாபித் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்)

ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப்  பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெருவது ஆகுமானதாகும். மற்றோர் அறிவிப்பின்படி, எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் َضِيَ اللَّهُ عَنْ,இப்னு உமர் َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

நிச்சயமாக என் தந்தை என்னை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அழைத்துச் சென்று, நாயகமே நிச்சயமாக நான் இந்த என்னுடைய மகனுக்கு ஓர் அடிமையை நன்கொடையாக அளித்தேன் என்று கூறினார். அதற்கவர்கள், இவ்விதமாகவே உம்முடைய எல்லா மக்களுக்கும் நன்கொடை அளித்திருக்கின்றீரா? என்று  வினவினர். அதற்கு என் தந்தை இல்லை என்று மறுமொழி பகர்ந்தார். (அது கேட்ட) நபி صلى الله عليه وسلم அவர்கள், அவ்விதமாயின் அவ்வடிமையைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும் என்று கூறினர். (அறிவிப்பவர்: நூமான் ப்னுபஷீர் َضِيَ اللَّهُ عَنْ நூல் முஅத்தா, அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ)

நபி صلى الله عليه وسلمஅவர்கள் எனக்கு நன்கொடைகள் அளித்து வந்தனர். அப்பொழுது நான் என்னைவிட அதிக தேவையுள்ளவர்களுக்கு இவற்றை அளியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இவற்றை   ஏற்றுக்கொள்ளும் அன்றி, நீர் கோராமலும் நீர்  விரும்பாமலும் எந்தப் பொருளையும் நீர் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவ்விதமாக எந்தப் பொருள் மீது நீர் நாட்டம் வைக்காதீர் என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுஸ் ஸயீத் அவர்கள் உமர் َضِيَ اللَّهُ عَنْ மூலமாக அறிந்து நூல் புகாரீ, முஸ்லிம்)

ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு கிஸ்ரா (எனும் ஈரான் நாட்டு மன்னர்) அன்பளிப்பு  அனுப்பினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அன்றி, (மற்ற) அரசர்களும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு அன்பளிப்பை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏற்றுக் கொண்டனர். (அறிவிப்பவர்: அலீ َضِيَ اللَّهُ عَنْ நூல் திர்மிதீ)

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: